BSL Banner
Not Verified

SUBA'S SKILLS ACADEMY,TIRUPUR

Location: 352/396,3rd floor, Avinashi Main Rd, near PUSHPA BUS STOP, Tiruppur, Tamil Nadu 641602
4.9 Rating | 62 Reviews

+919500957080 | +919500957080
Write a Review
About

Photos
Social Media
              
Reviews
4.9
62 Reviews
1 Star 5 Stars
சத்தியசீலன்
16 Jun, 2025

இப்பதிவை காணும் அனைவருக்கும் இனிய காலை, மதிய, மாலை, இரவு வணக்கம் நான் Subas Skill Academy அகாடமி கடந்த (December -2024 to June -2025)ஐந்து மாதங்களாக ஆன்லைன் வகுப்பை பங்கேற்று அதில் தெரிந்து கொண்ட விஷயங்களை இங்கு ஒரு விளக்கயுரை கொடுக்க விரும்புகிறேன். அது ஒரு நன்றியுரையாகவும் இருக்கும் இப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மனிதனுக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்று முக்கிய விஷயங்கள் உடை என்பது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்றாகத்தான் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 146 கோடி மக்கள் தொகை உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் (ஆடை) உடையை பயன்படுத்துவர்களாக இருக்கிறார்கள், அந்த ஆடை சம்பந்தமான துறையில் நாம் இருப்பது மிகவும் பெருமைப்படவேண்டும். அப்படிப்பட்ட இந்த கார்மெண்ட் துறையில் நமக்குத் தெரியாமல் பல விஷயங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது தெரியாமல் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களும் இருக்கிறது. ஆடை உற்பத்திக்கு தேவையான பஞ்சு முதல் கடைசி விற்பனை வரை பல்வேறு துறைகள் இருந்தாலும் இந்த அனைத்து துறைகளிலும் பணியாற்றுபவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் இவர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கக்கூடிய ஒருவர்தான் மெச்சண்டைசர், மிகவும் அரிதானது காரணம் நான் இந்த தொழிலில் பல ஆண்டுகளாக பயணித்து இருந்தாலும் யாரும் சொல்லத் தயங்குகின்ற தெரியக்கூடாத விஷயங்களை திரு சுரேஷ் பாபு அவர்கள் அனைவருக்கும் புரியும் படியாகவும் மிகவும் தெளிவாகவும் விளக்குகிறார் ஒருவேளை நீங்கள் இந்த பதிவை காணும் பட்சத்தில் நீங்கள் இந்தத் தொழிலில் இருக்கும் பட்சத்தில் இவருடைய கருத்துகளும் வகுப்புகளும் உங்களுக்கு பயன்படக்கூடியதாகவே இருக்கும் காரணம் பல ஆண்டுகள் தவறு செய்து நீங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்களை எளிய நடைமுறையில் விளக்குகிறார் அப்படிப்பட்ட மெர்சண்டேசர் துறையில் புதிதாக வருபவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும் அச்சந்தேகங்களை தீர்ப்பதற்கு தன்னுடைய உயர் அதிகாரிகள் அவ்வளவு சீக்கிரம் உதவ மாட்டார்கள் ஒருவேளை அவர்கள் உதவினாலும் உடல் உடனடியாக இவர்களுக்கு புரியாது, எப்படியும் ஒரு சிறந்த வல்லுனராக இத்துறையில் சாதிக்க அவர்களுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆவது தேவைப்படும் ஒரு சிலர் மட்டுமே இந்த விஷயங்களை சீக்கிரம் கற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்கிறார்கள் அப்படி முயற்சி மேற்கொள்பவர்களுக்கு ஒரு வரமாக இருப்பது தான் இந்த Subas Skill Academy காரணம் நான் என் துறையில் கிட்டத்தட்ட (2026-MAY) 19 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன் யாரும் சொல்லக்கூடாது விஷயங்களையும் இந்த வகுப்பில் மிகவும் எளிமையாக புரியும் முடியும் திரும்பத் திரும்ப கேட்டாலும் அதை சலிக்காமல் சொல்லிக் கொடுக்கும் ஒரு வகுப்பு ஆசிரியர் தான் திரு சுரேஷ் பாபு அவர்கள் அவருடைய பணி மிகவும் போற்றுதலுக்குரியது நான் அப்படித்தான் உணர்கிறேன் நீங்களும் அதே உணர்வீர்கள் என்று நம்புகிறேன். GARMENT MERCHANDISING YARN TO SHIPMENT COURES. இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் காலை 6:30 மணிக்கு ஆன்லைன் வகுப்பு இது ஒரு பயனுள்ள வகுப்பாக எனக்கு அமைந்தது. காரணம் காலை 6 மணி முதல் 8 மணிக்குள் வேலைகள் தூங்கும் முன்பே வகுப்பில் நான் பங்கு கொள்ள வாய்ப்பாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளையும் கருத்துகளையும் என்னுள் பதிவு செய்து விட்டீர்கள். இந்த கார்மெண்ட் துறை என்றும் அழிவில்லாதது மென்மேலும் வளரும் துறையாகும். உங்களுடைய கருத்துக்களை போல் ஒவ்வொருவரும் முதலாளி என்ற எண்ணத்துடன் வேலையை செய்தால் அனைத்து வேலைகளும் மிகச் சரியாகவும் சிறப்பாகவும் கச்சிதமாகவும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த வகுப்பில் நான் நிறைய நல்ல விஷயங்களையும், தகவல்களையும்,குறிப்புகளையும், புத்தகத்தின் தலைப்புகளையும் மேலும் மனிதனாக பிறந்த ஒருவன் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து(உணர்ந்து)கொண்டேன். உங்களின் பயணமும், பணியும் நூற்றாண்டுகள் தாண்டியும் நம்முடைய சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டுமாய் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்… உங்களது பணியும் பயணமும் இனிதே அமைய வாழ்த்துக்கள் நன்றி சார்….

Read all reviews on Google